பாகிஸ்தான் டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்!

download 2 6
download 2 6

பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் பங்குபற்ற மாட்டார் என அந்நாட்டு கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சவுதெம்டன் மைதானத்தில் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இடம்பெறவுள்ள நிலையில், பென் ஸ்டோக்ஸின் தந்தைக்கு உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் நியூசிலாந்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.