தோனியின் ஓய்வை குறித்து விராட் கோலியின் பதிவு

EEPdP7YU0AA4Ktd 770x433 1
EEPdP7YU0AA4Ktd 770x433 1

நாட்டிற்காக தோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை பிடிக்கும் என இந்திய கப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் அணித்தலைவருமான மஹேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டார்.

இந்நிலையில், இந்திய கப்டன் விராட் கோலி, நாட்டிற்காக தோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அவருக்கு அளிக்கும் என புகழாரம் சூட்டியுள்ளார்.

அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஒருநாள் தன்னுடைய பயணத்தை முடித்தாக வேண்டும். ஆனால், மனதிற்கு நெருக்கமானவர்கள் இத்தகைய முடிவை எடுக்கும்போது நமக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என விராட் கோலி தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நாட்டிற்காக தோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அவருக்கு அளிக்கும்.

நான் மனிதனை பார்ப்பேன். சக வீரராக தோனி கொடுத்த மரியாதை, அரவணைப்பு தன்னுள் நீங்காமல் இருக்கும். அவருக்கு தலை வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்