மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று

test 720x380 1 620x330 1
test 720x380 1 620x330 1

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகிறது.

சதம்டனில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

எனினும், கடந்த போட்டியின் போது நிலவிய சீரற்ற வானிலை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக, இந்தப் போட்டியை 30 நிமிடங்கள் முன்னதாகவே ஆரம்பிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டாவது போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த நிலையில், முதல் போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, 1 க்கு 0 என்ற அடிப்படையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.