தெற்காசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி சம்பியனாகியது

srilanka netball
srilanka netball

தெற்காசிய நாடுகளுக்கான 16 வயதிற்குட்பட் பெண்களுக்கான வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி சம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.

இலங்கை அணி, இந்திய அணியை 42-28 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது,

நேபாளம் காத்மண்டுவில் முதல் தடவையாக நேபாள வலைபந்து சங்கம் ஒழுங்கு செய்திருந்த இந்த வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் ஒக்டோபர் 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை நடைபெற்றது. இத் தொடரில்
16 வயதிற்குட்பட்ட இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் வலைப்பந்து அணிகள் பங்கெடுத்திருந்தன.

இலங்கை 16 வயதிற்குட்பட்ட வலைப்பந்து அணியின் வீராங்கனையான நெத்மி விஜேநாயக்க தொடரில் சிறந்த சூட்டராக தெரிவாகவும், பங்களாதேஷின் மிஷ்கா சிறந்த தடுப்பு வீராங்கனையாகவும் தெரிவாகினார்.