பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு ஆரம்பம்

SLPP
SLPP

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு சற்று முன்னர் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் உள்ள மஹிந்த ராஜபக்‌ஷ மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.

´உறுதியான நோக்கம் – தொழில் செய்யும் நாடு´ என்ற தொனிப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.

பல தொழில் வல்லுனர்கள் மற்றும் சமூக குழுக்களின் ஆலோசனைகளை பெற்று இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.