அவுஸ்ரேலியா-இலங்கை மோதும் 2வது T20I

aus v sl
aus v sl

சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையில் 03 போட்டிகள் கொண்ட T20I தொடர் நடைபெற்று வருகிறது.

27ம் திகதி நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி மிக மோசமான தோல்வியை சந்தித்திருந்தது.

இந்நிலையில் 2வது போட்டி பிரிஸ்பேனில் இன்று பிற்பகல் இலங்கை நேரப்படி 1.40 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மூன்று போட்டிகளை கொண்ட இத்தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி 1 – 0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது T20I போட்டியில் இருந்து அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளரான மிச்செல் ஸ்டார்க் அவரது சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதால் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அவுஸ்ரேலிய மண்ணில் இதுவரை நடைபெற்ற T20I தொடர்களில் இலங்கை அணி தொடரை இழந்தது கிடையாது. இந்நிலையில் அதனை தக்க வைக்கும் முனைப்பில் இலங்கை அணியும் புதிய வரலாற்றினை படைக்கும் நோக்கில் அவுஸ்ரேலிய அணியும் இன்று களம் காணவுள்ளது.