அவுஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது

aus vs sl
aus vs sl

சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையில் 03 போட்டிகள் கொண்ட T20I தொடரின் 2வது போட்டியிலும் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 13 ஓவர்கள் நிறைவில் 1 விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது.

டேவிட் வோனர் 60 ஓட்டங்களையும் ஸ்மித் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். ஆட்டநாயகனாக டேவிட் வோனர் தெரிவு செய்யப்பட்டார்.

2வது போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் அவுஸ்ரேலிய அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

தொடரின் கடைசி போட்டி எதிர்வரும் 1ம் திகதி நடைபெறவுள்ளது.