சுப்பர் ஓவரில் வெற்றியீட்டியது ரோயல் செலஞ்சர்ஸ்

A70I3215
A70I3215

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரில் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி சுப்பர் ஓவரின் மூலம் வெற்றியீட்டியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 3 விக்கட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் ஏ.பி.டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காது 24 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்தநிலையில், 202 என்ற வெற்றியலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதால் போட்டி சமனிநிலை பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் சார்பில் துடுப்பாட்டத்தில் இசான் கிஷான் 99 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 1 விக்கட்டை இழந்து 7 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் 8 என்ற வெற்றியலக்கை நோக்கி துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி விக்கட் இழப்பின்றி வெற்றியிலக்கை கடந்தமை குறிப்பிடத்தக்கது.