வெற்றிக்கணக்கினை ஆரம்பித்த இங்கிலாந்து அணி

james vince
james vince

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட T20I தொடரின் முதலாவது போட்டிியில் 07 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பினை தேர்ந்தெடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 5 விக்கட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, நியூசிலாந்து அணி சார்பாக ரிம் சீஃபர்ட் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது. இங்கிலாந்து அணி சார்பாக வின்ஸ் 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஆட்டநாயகனாக வின்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

முதலாவது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது..