கடைசி இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

1200px சென்னை சூப்பர் கிங்ஸ்.svg copy
1200px சென்னை சூப்பர் கிங்ஸ்.svg copy

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது.

முன்னதாக, முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் குவித்தது. பின்னா் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் எடுத்து தோல்வி கண்டது.

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி, 2-ஆவது வெற்றியைப் பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து கடைசி இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.