சென்னையை தெறிக்க விட்டது ஹைதராபாத்!

8f6c6 15554875938722 500
8f6c6 15554875938722 500

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை07 ஓட்டங்களினால் வீழ்த்தி சன்ரைஸஸ் ஹைதரபாத் அணி வெற்றி பெற்றது.

டுபாயில் நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்படுத்தாட தீர்மானித்தது,

இதனடிப்படையில் முதலில் துடுப்படுத்தாடிய சன்ரைஸஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

சன்ரைசஸ் அணி சார்பில் பிரியம் கார்க் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் சென்னை சார்பில் தீபக் சஹார் 02 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

165 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களுக்கு 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா அதிக பட்சமாக 50 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க இறுதிவரை போராடிய அணித் தலைவர் மஹேந்திரசிங் தோனி ஆட்டமிழக்கமால் 47 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

போட்டியின் நாயகனாக பிரியம் கார்க் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைஸஸ் ஹைதரபாத் அணி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளில் தோல்வியுமாக 4 புள்ளிகளுடன் 4 ம்இடத்தில் உள்ளதோடு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தொடரில் 4 போட்டியில் விளையாடியுள்ள நிலையில் ஒரே ஒரு வெற்றியை மாத்திரம் பெற்று புள்ளிப்பட்டியலில் இறுதி இடமான 8வைத்து இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது