சென்னையை பந்தாடியது பெங்களூர் அணி !

cbvixcf
cbvixcf

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 25 ஆவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் அணி 37 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 25 ஆவது போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று இரவு 7.30 இற்கு ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடாத்தின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக அதிகபட்சமாக விராட் கோலி ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்தார் .

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்டம் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக அம்பதி ராயுடுஅதிகபட்சமாக 42 ஓட்ட ங்களை பெற்றுக்கொடுத்தார்

இதேவேளை, இந்தப் போட்டியின் சிறந்த வீரராக விராட் கோலி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.