ஒரே நேரத்தில் இரண்டு அணிகள் :அவுஸ்திரேலிய பயிற்சியாளர் எதிர்ப்பு

download 9 1
download 9 1

இரண்டு அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிகள் ஒரே சமயத்தில் போட்டிகளில் ஈடுபடுவதற்கு அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் தமது உறுதியான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியுடன் ஐந்து 20 க்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில், எதிர்வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் அவுஸ்திரேலிய அணி பங்கேற்க திட்டமிட்டுள்ளது.

இதேநேரம், எதிர்கால கிரிக்கட் சுற்றுப்பயண திட்டத்திற்கு அமைய தென்னாபிக்க அணியுடனுடன் அவுஸ்திரேலிய அணி கிரிக்கட் தொடரில் பங்கேற்க உள்ளது.

குறித்த இரண்டு தொடர்களும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் இரண்டு கிரிக்கட் அணிகள் ஒரே நேரத்தில், இரண்டு அணிகளுடன் போட்டிகளில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய தலைமை பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.