ஊவா மாகாணங்களில் டெங்கு பரவுவதை தடுக்கும் வகையில் விசேட சோதனைகள்!

12
12

ஊவாமாகாண சுகாதார திணைகளத்தின் அறிவுறுத்தலின் கீழ் ஹாலிஎல மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளின்  சுகாதார வைத்திய காரியாலயங்களுக்க உட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில்  விசேட சோதனைகள்  பிரதேச சுகாதார பரிசோதகர்களினால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது டெங்கு நோய் பரவும் வகையில் காணப்பட்ட 50 க்கும் அதிகமான வீட்டுத்தோட்டம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் உரிமையாளர்களுக்கு டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சுற்றாடலை வைத்திருக்குமாறு  கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த டெங்கு ஒழிப்பு பரிசோதனையில்  மாகாண சுகாதார திணைக்களத்தின்  பரிசோதக அதிகாரிகளும் ஹாலிஎல மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளின்  சுகாதார வைத்திய காரியாலயங்களுக்கு உட்பட்ட சுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.