ராஜஸ்தானை திணறடித்தது டெல்லி கெப்பிட்டல்ஸ்

AI 7383
AI 7383

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர்லீக் தொடரின் நேற்று (14)நடைபெற்ற போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் 13 ஓட்டங்களால் சிறப்பான வெற்றி ஒன்றினை பதிவு செய்தது .

13 IPL தொடரின் 30ஆவது போட்டி டுபாய்சர்வதேச மைதானத்தில் நேற்று இரவு 7.30 இற்கு ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோஜல் அணிகள் பலப்பரிட்சை நடத்தியிருந்தன

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பில் ஷிகர் தவான்57 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 53 ஓட்டங்களையும் அதிகப்படியாக பெற்றுக்கொடுத்தனர்.

ராஜஸ்தான் ரோஜல் அணி சார்பில் பந்து வீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 இலக்குகளையும் ஜெய்தேவ் உனட்கட்இரண்டு இலக்கு களையும் வீழ்த்தினார்கள் .

பதிலுக்கு 162 ஓட்டங்களை வெற்றிஇலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோஜல் அணியானது தனக்கு வழங்கப்பட்ட 20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில்148 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 13ஓட்டங்களால் தோல்வியை தழுவியது

அணி சார்பாக துடுப்பட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 41 ஓட்ட ங்களையும் ராபின் உத்தப்பா 32 ஓட்ட ங்களையும் அதிக படியாக பெற்றனர்

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி சார்பில் பந்து வீச்சில் துஷார் தேஷ்பாண்டே,அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா இரண்டு விக்கட்ட்டுக்களை வீழ்த்தினார்

தி வேலை நடப்பு IPL தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலாம் இடத்தில் டெல்லி கெப்பிட்டல்ஸ்அணியும் 7ம் இடத்தில் ராஜஸ்தான் ரோஜல் அணி உள்ளமை குறிப்பிடத்தக்கது .