மும்பை இந்தியன்ஸ் – பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் இன்று மோதல் !

MI vs RCB
MI vs RCB

இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

அபுதாபியில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தலா 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி முதலிடத்திலும், பெங்களூர் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இன்றைய போட்டியில் வென்று பிளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்ய இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

காயத்தால் அவதிப்பட்டு வரும் மும்பை அணியின் தலைவர் ரோகித் சர்மா, இன்றைய போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் பெங்களூர் அணி, சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.