டெல்லி அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி !

sunrisers hyderabad03 1599408819 1
sunrisers hyderabad03 1599408819 1

13ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 47 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்அணி 88 ஓட்டங்களினால் அபார வெற்றியிட்டியுள்ளது செய்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் அமைந்துள்ள டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இந்த போட்டி நடைபெற்றது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ்அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

சன்ரைசர்ஸ்அணி சார்பில், டேவிட் வோனர் 66 ஓட்டங்களையும் விருத்திமான் சஹா,87 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

220 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல் அணி, 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

டெல்லி கேப்பிட்டல் அணி சார்பில்,ரிஷாப் பந்த்36 ஓட்டங்களையும், அஜின்கியா ரஹானே26 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இந்த நிலையில், போட்டியின் சிறப்பாட்டக்காரராக, விருத்திமான் சஹா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது