ஐபிஎல் 2020 பரபரப்பான ஆட்டம் இன்று:ஹைதராபாத்- பெங்களூர் அணிகள் மோதல்!

149937 iuujkhxyvj 1604067296
149937 iuujkhxyvj 1604067296

நடப்பு ஆண்டுக்கான பரபரப்பு மிக்க இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கான வெளியேற்றுப் போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.

தீர்க்கமான இப்போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) அபுதாபியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஹைதராபாத் அணிக்கு டேவிட் வோர்னரும், பெங்ளூர் அணிக்கு விராட் கோஹ்லியும் தலைமை தாங்கவுள்ளனர்.

இப்போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகின்றது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, இறுதிப் போட்டிக்கான இரண்டாவது நேரடி தகுதி போட்டிக்கு தகுதி பெறும்.

ஏற்கனே மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதிய இறுதிப் போட்டிக்கான முதலாவது நேரடி தகுதி போட்டியில், மும்பை அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டது.

ஆகவே தோல்வியடைந்த டெல்லி அணியும், இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணியும், இறுதிப் போட்டிக்கான இரண்டாவது நேரடி தகுதி போட்டியில் மோதும். தோல்வி பெறும் அணி நான்காவது இடத்தை பெறும்.