ஹைதராபாத் அணி 6 விக்கட்டுகளால் வெற்றி!

sunrisers hyderabad03 1599408819 696x392 1
sunrisers hyderabad03 1599408819 696x392 1

ஐபிஎல் தொடரில் நேற்று(06) நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கட்டுகளால் வெற்றிப் பெற்றது.

இதன்படி சன்ரைசர்ஸ் அணி, இறுதிப்போட்டியில் பங்கெடுக்கும் இரண்டாவது அணியை தெரிவு செய்வதற்கான போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நாளை மோதவுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர், 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலளித்தாடிய சண்ரைசர்ஸ் 19.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

ஆட்டநாயகனாக கேன் வில்லியம்ஸன் தெரிவானார்.

இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஏலவே இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.