அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: வாக்கு எண்ணும் பணிகள் 98 சதவீதம் நிறைவு

625.500.560.350.160.300.053.800.900.160.90 7
625.500.560.350.160.300.053.800.900.160.90 7

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவு மேலும் தாமதிக்கின்ற போதும், ஜோ பைடனின் வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பென்சில்வேனியா மாநிலத்தின் வாக்கு எண்ணும் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அறியமுடிகிறது.

இதன்படி அங்கு ஜோ பைடன் சிறிய வாக்குவித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பென்சில்வேனியா வாக்காளர் குழுவில் 20 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில், அங்கு பைடன் வெற்றிப் பெறுவாராக இருந்தால், தற்போது 253 ஆசனங்களைப் பெற்றுள்ள அவர் 273 ஆசனங்களுடன் ஜனாதிபதியாக தெரிவாகும் வாய்ப்பு உள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் இதுவரையில் 214 ஆசனங்களைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, ஜோர்ஜியாவிலும், நெவேடா மற்றும் அரிசோனா மாநிலங்களிலும் பைடன் முதன்மைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் தாமே இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

இந்த தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாக முறையான ஆதாரங்கள் எதனையும் முன்வைக்காமல் அவர் தரப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் ரஷ்யாவின் ஊடகங்களும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி இடம்பெற்றிருப்பதாக பரவலாக செய்தி வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.

எனினும் தாம் வெற்றிப் பெற்றமை உறுதி என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார்