தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து!

Jonny Bairstow
Jonny Bairstow

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பேர்ஸ்டோவின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

அந்தவகையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் இருபதுக்கு 20 போட்டி கேப் டவுனில் நேற்றைய தினம் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன்படி தென் ஆபிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான பவுமா 5ஓட்டங்களிலும் , டி காக் 30 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்துக் களமிறங்கிய டு பிளசிஸ் அபாரமாக துடுப்பெடுத்தாடி அரை சதமடித்தார். எனினும் அவர் 58 ஒட்டங்களைப் பெற்ற நிலையில் வெளியேறினார். மேலும் வான் டர் டுசன் 37ஓட்டங்களிலும் கிளாசன் 20 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், தென் ஆபபிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179ஓட்டங்களை எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 180 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில்ஆட்டமிழந்தனர். டேவிட் மலன் 17 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். பென் ஸ்டோக்ஸ் 37 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வெளியேறினர். மேலும் இயான் மோர்கன் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

எனினும் பேர்ஸ்டோவ் இறுதி வரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், இங்கிலாந்து அணி 19.2 ஒவரில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் விருது பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் டி 20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.