டக்வத் லூயிஸ் முறையில் வென்றது தம்புள்ளை அணி !

unnamed 37
unnamed 37

முதலாவது லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் 3 ஆவது போட்டியில் டக்வத் லூயிஸ் முறையில் தம்புள்ளை வீக்கிங்அணி வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த போட்டியில் கண்டி தாஸ்கர்ஸ் மற்றும் தம்புள்ளை வீக்கிங் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சூழற்ச்சியில் வெற்றிப்பெற்ற கண்டி தாஸ்கர்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள வீக்கிங் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தம்புள்ளை வீக்கிங் அணிக்காக தாசுன் ஷானகா74 ஓட்டங்களையும், சமித் படேல் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த நிலையில் 196 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் கண்டி தாஸ்கர்ஸ் அணி சற்று முன்னர்வரையில், .9 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் மழை குறுக்கிட்டது.

இந்த நிலையில், டக்வத் லூயிஸ் முறையில் தம்புள்ளை வீக்கிங்அணி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கபட்டது.

இதேவேளை, லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் 4 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில், காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.குறித்த போட்டி மழைக்காணமாக தாமதாகியுள்ளது.