கங்காருக்களிடம் மண்டியிட்டது இந்தியா!

sus
sus

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்அவுஸ்ரேலியாஅணி 51 ஓட்டங்களால் அபாரவெற்றி பெற்றுள்ளது

சிட்னியில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தடியஅந்த அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 389 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்ரேலியா அணிசார்பில் அதிக படியாக டேவிட் வோர்னர் 83 ஓட்டங்களையும் ஆரோன் பின்ச் 60 ஓட்டங்களையும்
ஸ்டீவன் ஸ்மித் 104 ஓட்டங்களையும் லபுசாக்கே 70 ஓட்டங்களையும் அதிரடியாக விளையாடிய மக்ஸ்வெல் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்

இந்திய அணி சார்பில் மொஹமட் ஷமி, பும்ரா மற்றும் ஹார்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 50 ஓவர்கள் நிறைவில் 331ஓட்டங்களை மாத்திரமே பெற்று 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அவ்வணி சார்பாக அணித்தலைவர் விராட் கோலி 89 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் பட் கம்மின்ஸ் 3 விக்கெட்களையும் சம்பா மற்றும் ஹசில்வுட் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். என்பதும் குறிப்பிடத்தக்கது