அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி!

ind vs aus 2122020m2
ind vs aus 2122020m2

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 13 ஓட்டங்களினால் பெற்றிபெற்றுள்ளது.

கான்பெரா மைதானத்தில் இன்று (2)ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ஹார்டிக் பாண்டியா 92 ஓட்டங்களையும் ரவீந்திர ஜடேஜா 66 ஓட்டங்களையும் அட்டமிழக்கத்து பெற்றுக்கொள்ள அணித் தலைவர் விராட் கோலி 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக அஷ்டன் அகர் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதனை அடுத்து 303 என்ற வெற்றி இலக்கோடு அவுஸ்ரேலியா அணி பதிலுக்கு களமிறங்கியது.

49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 289 ஓட்டங்களை மாத்திரமே அவுஸ்ரேலியா அணி பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ஆரோன் பின்ச் 75 ஓட்டங்களையும் மக்ஸ்வெல் 59 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் சர்துல் தாக்கூர் 3 விக்கெட்களையும் பும்ரா மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில்இந்தியஅணி வெற்றி பெற்றாலும் ஒருநாள் தொடரை அவுஸ்ரேலியா அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.