விநோத உலோகப்பொருளை கடத்திய 4 பேர்!

AP20329644529093.0
AP20329644529093.0

அமெரிக்காவின் உட்டாவில் உள்ள பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட விநோத உலோகப்பொருள், திடீரென மாயமான நிலையில், அதை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது தற்போது தெரியவந்துள்ளது.

ரெட் ராக் பாலைவனத்தில் செங்குத்தாக பொருத்தப்பட்டிருந்த 12 அடி உயர ஒளிரும் உலோகப் பொருள் பலரின் கவனத்தை ஈர்த்தது.

இது ஏலியன்களின் வேலையாக இருக்கலாம் என பேசப்பட்டு வந்த நிலையில், அடுத்த சில நாட்களில் அந்த பொருள் மாயமாக மறைந்தது.

இந்நிலையில், 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, இரவோடு இரவாக அந்த பொருளை கடத்திச்செல்லும் புகைப்படங்களை அங்கு மறைந்திருந்து படம்பிடித்த பெர்னார்ட்ஸ் என்பவர் வெளியிட்டுள்ளார்.