முதல் T-20 இல் வெற்றி பெற்றது நியூஸிலாந்து

4
4

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் T-20 போட்டியில், நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் லசித் மாலிங்க முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.
அதற்கிணங்க முதலில் களமிறங்கிய இலங்கை அணி குசல் மென்டிஸின் மிகச் சிறந்த ஓட்ட வேகத்துடன் ஆட்டத்தை நகர்த்தியிருந்தார்.
மறுமுனையில், நிரோஷன் டிக்வெல்ல 33 ஓட்டங்களையும், தசுன் ஷானக 17 ஓட்டங்களையும் பெற்றனர். இன்னிங்ஸின் இறுதி 3 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடங்கலாக இசுரு உதான 15 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் அணித் தலைவர் டிம் சௌத்தி 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், மிச்சல் சென்ட்னர் 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மூவரை மிக விரைவில் இழந்தும், ரொஸ் டெய்லர் மற்றும் கொலின் டி கிரெண்டோம் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தால், 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
மிச்சல் சான்ட்னர் மற்றும் டார்லி மிச்சல் ஆகியோரின் இணைப்பாட்டம் நியூசிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிச்சல் சென்ட்னர் 14 ஓட்டங்களையும், டார்லி மிச்சல் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.
ஆட்டநாயகனாக டெய்லர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்த வெற்றிமூலம் இந்தத் தொடரில் நியுசிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கின்றது.இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது T-20 போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.