கோல் கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தியது தம்புள்ள வைக்கிங்அணி!

mqdefault live
mqdefault live

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 12 ஆவது போட்டியில் தம்புள்ள வைக்கிங்அணி 9 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் தம்புள்ள வைக்கிங் மற்றும் கோல் கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள வைக்கிங்அணி, 7 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

தம்புள்ள வைக்கிங் அணி சார்பில்,உபுல் தரங்க 77 ஓட்டங்களையும்,நிரோஷன் டிக்வெல்ல 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இந்த நிலையில், 208 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கோல் கிளாடியேட்டர்ஸ் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

காலி கிளாடியேட்டர்ஸ் அணி சார்பில்தனுஷ்க்க குணாதிலக்க 78 ஓட்டங்களையும் அசாம் கான் 55 ஓட்டங்களையும், பெற்றுக் கொடுத்தனர்.

இந்த நிலையில், போட்டியின் சிறப்பாட்டக்காரராக அன்வர் அலி தெரிவு செய்யப்பட்டார்.

.