கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பம்!

113165123 111837318 gettyimages 871322928
113165123 111837318 gettyimages 871322928

ரஷ்யா கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை மொஸ்கோவில் ஆரம்பித்துள்ளது.

ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் 5 என்ற இந்த தடுப்பூசி கடந்த ஆகஸ்ட் மாதம் அங்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த தடுப்பூசி 95 சதவீதம் வினைத்திறனானது என்று அதனைத் தயாரித்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் மொஸ்கோவில் கொரோனா நோய் அபாயம் அதிகம் உள்ள இடங்களில் இந்த ஊசிமருந்து வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பஹ்ரெய்னும், பைசர் மற்றும் பயோ என் டெக் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிவழங்கியுள்ளது.

ஏற்கனவே பிரித்தானியா இந்த மருந்துக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.