ஜடேஜாவிற்கு பதில் யுவேந்திர சஹாலை இறக்க கூடாது- அவுஸ்திரேலியா பயிற்சியாளர்!

pic
pic

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜடேஜாவிற்கு பதில், சுழற்பந்து வீச்சாளர் சஹாலை இறக்கக்கூடாது என்று அந்தணியின் பயிற்ச்சியாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி சார்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 பந்துகளில் 44 ஓட்டங்கள் குவித்த ஜடேஜாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட முடியவில்லை.

இதனால் அவருக்கு பதிலாக இந்திய அணியில், சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சஹாலை களமிறக்கினர். ஆனால் அவுஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இது முறையானது அல்ல. இப்படி ஒரு ஆல்ரவுண்டருக்கு மாற்று வீரராக சுழற்பந்துவீச்சாளர் இருக்கக் கூடாது என்று வாதித்துக் கொண்டிருந்தார்.

ஆனால், அவுஸ்திரேலியா நடுவராக இருந்த டேவிட் பூன் அவையெல்லாம் விதிகளில் இருக்கிறது. இப்படி தேவையில்லாமல் வாக்குவாதம் செய்யாதீர்கள் என்றார் நடுவர். பின் இந்திய வீரர்களை ஆட அனுமதித்தார்.