பிரான்ஸ் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி!

download 3 1
download 3 1

பிரான்ஸ் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என பிரதமர் ஜீன் காஸ்டெஸ் அறிவித்துள்ளார்.

பல்வேறு மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசி வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அரசாங்கம், அடுத்த ஆண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுகுறித்து பிரதமர் ஜீன் காஸ்டெஸ் மேலும் கூறுகையில், ‘பிரான்ஸ் மக்கள் அனைவருக்கும தடுப்பூசி இலவசமாக போடப்படும். இதற்காக எதிர்வரும் நிதியாண்டில் 1.5 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்படும். ஐரோப்பிய ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்தின் ஒப்புதலுக்காக உள்ளதால் இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கப்படும்.

பல்வேறு மருந்து நிறுவனங்களிடம் இருந்து 200 மில்லியன் டோஸ் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பாக இருக்கும் என்று மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்’ என கூறினார்.