உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் அறிவிப்பு!

04 1428148335 1 everest kalapatthar crop
04 1428148335 1 everest kalapatthar crop

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் 8,848.86 மீட்டர் என நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 0.86 சென்றி மீற்றர் அதிகரித்துள்ளது என கியாவாலி தெரிவித்துள்ளார்.

உலகின் மிக உயர்ந்த சிகரத்தை அளவிடுவது தொடர்பான பணிகள் ஒரு வருட காலம் இடம் பெற்றது.

இந்த சிகரம் கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 200 மீட்டர் அதாவது 30 ஆயிரத்து 200 அடி இருந்ததாக கூறப்பட்டது.

ஆனால் 1954 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி சாகர் மாதாவின் சிகரத்தின் உயரம் 8,848 மீற்றர் என்றும் அதாவது 29 ஆயிரத்து 26 அடி என்றும் கூறப்பட்டது.

சாகர்மாதா எவரெஸ்ட் சிகரத்தின் நேப்பாளப் பெயராகும்.

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதனை அடுத்து இது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேபாள அரசு இன்று அறிவித்தது.