பிறந்து 20 நாட்களேயான சிசுவையும் சாகடித்தது கொரோனா!

20200310 health coronavirus china baby
20200310 health coronavirus china baby

இலங்கையில் மிகக் குறைந்த வயதான கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

பிறந்து 20 நாட்களேயான சிசு ஒன்று, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பொரளை சீமாட்டி றிஜ்வே ஆரியா சிறுவர் வைத்தியசாலையிலேயே இந்தச் சிசு உயிரிழந்துள்ளது.

இலங்கையில் கொரோனாத் தொற்றால் மிகக் குறைந்த வயதான ஒருவர் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கொரோனாத் தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியா காய்ச்சலே சிசுவின் உயிரிழப்புக்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – பாலத்துறை (தொட்டலங்க) பகுதியைச் சேர்ந்த சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த சிசு அதிக காய்ச்சல் காரணமாக நேற்றிரவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தாமதித்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டமையினாலேயே, சிசுவைக் காப்பாற்ற முடியவில்லை என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த குழந்தையின் தாய் மற்றும் தந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனைகளில் அவர்களுக்குக் கொரோனாத் தொற்று ஏற்படவில்லை என வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவித்தன.