கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்காக கேட்ஸ் அறக்கட்டளை 250 மில்லியன் டாலர் நிதியுதவி!

vikatan 2019 07 4fd82ad7 00f8 459a a742 ad02d550d379 bill gates
vikatan 2019 07 4fd82ad7 00f8 459a a742 ad02d550d379 bill gates

கொரோனாக்கு எதிரான போராட்டத்துக்காக பில் – மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை நிலையம் மேலதிகமாக 250 மில்லியன் டாலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது.

இந்த நிதியுதவியானது கொரோனவுக்கு எதிரான சிகிச்சைகள் மற்றும் குறைந்த விலையில் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கையை இலகுபடுத்தும் என்று கூறப்படுகிறது.

அத்துடன் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் சோதனைகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்குவதற்கும் இந்த பங்களிப்பு உதவும்.

பில் – மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை (Bill & Melinda Gates Foundation) என்பது உலகின் மிகப் பெரிய, வெளிப்படையாக இயங்கும், அறக்கட்டளை ஆகும். இந்த அமைப்பு 35 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலான முதலீட்டைக் கொண்டது.

மருத்துவம், ஏழ்மை ஒழிப்பு, கல்வி ஆகிய துறைகளில் இது முதன்மையாக இயங்குகிறது. இது அமெரிக்க மைக்ரோசோப்ட்டின் நிறுவனரான பில் கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா மற்றும் அவரது நண்பர் வாரன் பஃபெட் ஆகியோரால் வழிநடத்தப்படுகிறது.