சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகள் குழப்பம் விளைவிப்பதாக இருக்கின்றன-இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர்!

163771
163771

சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகள் குழப்பம் விளைவிப்பதாக இருக்கின்றன என இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவின் நடவடிக்கைகள் அந்நாட்டின் கம்யூனிஸ்ட் அடையாளத்துக்கு கலங்கம் விளைவிப்பதாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்திய தொழில், வர்த்தகக் கூட்டமைப்பின் 93-வது ஆண்டு விழாக் கூட்டத்தில் பேசிய ஜெய்சங்கர் கூறியதாவது:

சீனாவுடனான எல்லையில் இந்தாண்டு நடைபெற்ற விஷயங்கள் அனைத்தும் குழப்பம் விளைவிப்பதாகவே உள்ளன. இருநாடுகளும் ஒப்புக்கொண்டு ஏற்படுத்திய எல்லை பாதுகாப்பு உடன்படிக்கையை சீனா மதிக்கவில்லை. ஆகையால் சீனா எல்லை அமைத்திக்கான ஒபந்தத்தை மீறிய நாடாகவே உலகரங்கில் கவனிக்கப்படும்.

இந்திய மக்கள் சீனா மீது கொண்டுள்ள உணர்வை நான் கடந்த சில ஆண்டுகளாகவே உற்று கவனித்துவருகிறேன். அதேபோல், என் சிறு வயதிலும், இளமைப் பருவத்திலும் சீனா மீதான பார்வை இந்திய மக்கள் மத்தியில் என்னவாக இருந்தது என்பதையும் நான் உணர்வேன்.

எல்லையில் சீனாவின் பொறுப்பற்ற போக்கு தொடருமேயானால் இருநாடுகளுக்கும் இடையே இத்தனை காலமாக உருவாக்கப்பட்ட நல்லெண்ணம் எதிர்காலத்தில் சிதைந்துவிடும்” என்றார்.

அமெரிக்காவுடனான நட்புறவு குறித்துப் பேசுகையில், ஜோ பிடென் தலைமையில் அமையுள்ள ஆட்சிக்கு பருவநிலை கொள்கைகளுக்குக் கட்டுப்படுதல் பெரும் சவாலாக இருக்கும். வருங்காலத்தில் அமெரிக்காவுடனான இந்திய நட்புறவு மேம்படும் என்பதில் ஐயமில்லை எனவும் மேலும் தெரிவித்தார்