இந்த ஆண்டு டிசம்பர் வெளியாகவுள்ள ‘சியான்கள்’ திரைப்படம்!

NTLRG 20201127230059684004
NTLRG 20201127230059684004

என்ன தான் தமிழ் சினிமாவில் வருடாவருடம் பல திரைப்படங்கள் வெளியானாலும், வித்தியாசமான கதையில் ஓரிரண்டு திரைப்படங்கள் தான் வெளிவருகின்றன.

அந்தவகையில் உருவாகியிருக்கும் படம் தான் ‘சியான்கள்’ இந்தப் படம் இந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் வயதானவர்களின் உணர்ச்சிகளை பற்றி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, தயாரித்தும் நடித்தும் உள்ளார் கரி காலன். இவருக்கு ஜோடியாக ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களை பெருமளவில் ஈர்த்துள்ளது.

அதாவது வயதானவர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட புதுவிதமான திரைப்படம் தான் சியான்கள். ஆனால் தமிழகத்தில் சியான் என்றால் நமக்கெல்லாம் முதலில் ஞாபகம் வருவது நடிகர் விக்ரம் தான். உண்மையில் சியாரிள் என்றால் வயதானவர்கள் என்பதுதான் அர்த்தம்.

மேலும் இந்தப் படத்திற்கு முத்தமிழ் இசையமைக்க, பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ளாராம். எடிட்டிங் வேலைகளை ஜோதிகுமார் செய்து வருகிறாராம்.

தற்போது இந்த படத்தின் இருந்து சிங்கிள் ட்ராக் வீடியோ பாடல் ஒன்று வெளியாகி, ரசிகர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.