ஜமா இஸ்லாமியாவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இந்தோனேஷியா காவல்துறையினரால் கைது!

unnamed 41
unnamed 41

இந்தோனேஷியாவின் பாலி தீவில் 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் அல்கெய்தாவுடன் தொடர்புடைய போராளிக்குழுவான ஜமா இஸ்லாமியாவின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக இந்தோனேஷியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி பாலி தாக்குதலின் தளபதிகளில் ஒருவரான சுல்கர்னேன் என்பவர் வியாழக்கிழமை பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்று செய்தித் தொடர்பாளர் அஹமட் ரமலான் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்கிழக்கு ஆசியாவில் ஒரு இஸ்லாமிய கலிபாவைக் கட்டுவதே ஜமா இஸ்லாமியாவின் நோக்கம். அதன் முன்னாள் தலைவர் பரா விஜயந்தோ 2019 இல் கைது செய்யப்பட்டார்.

2002 ஆம் ஆண்டு பாலி தீவின் சுற்றுலா மையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் 202 பேர் உயிரிழந்ததுடன், 200 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.