ஐ.நா வாகனம் மீது தாக்குதல்; பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் மறுப்பு!

ib 1561809436
ib 1561809436

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் ஐ.நா பார்வையாளர்களின் வாகனத்தை குறி வைத்ததாக பாகிஸ்தான் குற்றம்சாட்டிய நிலையில் இருந்து மறுத்துள்ளது.

ஐ.நா வின் ராணுவ பார்வையாளர்கள் வாகனத்தை இந்திய ராணுவம் சிரிகோட் செக்டார் பகுதியில் வேண்டுமென்றே தாக்கியது. இதில் வாகனம் சேதமடைந்தது. ஆனால் அதில் இருந்து இருவருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சட்டியுள்ளது.

ஆனால், பாகிஸ்தான் குற்றச்சாட்டை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. ஐ.நா வாகனத்தின் மீது தாக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையில்லை என இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.