இத்தாலியில் கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைகள்

111040202 mediaitem111038839
111040202 mediaitem111038839

நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது நாடு முழுவதும் கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுகளை நடைமுறைப்படுத்த இத்தாலி முடிவு செய்துள்ளது.

இத்தாலியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகாித்து வருவதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் பண்டிகைக் காலங்களில் இத்தாலி அபாய வலயமாக அறிவிக்கப்பட்டு நடமாட்ட எல்லைகள் நிர்ணயிக்கப்படுவதோடு அத்தியாவசியமற்ற விற்பனை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் மதுபான சாலைகள் போன்றன மூடப்படும்.

இத்தாலி வாழ் மக்களுக்கு தங்கள் தொழில்களுக்கு செல்வதற்கு, சுகாதார மற்றும் அவசரத் தேவைகளுக்காக மாத்திரம் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும்.

இருப்பினும் இவ்வாறான பண்டிகைக் காலங்களில் நாட்டை மூடி வைப்பது இலேசான காாியமல்ல என அந்நாட்டுப் பிரதமர் ஜுசப்பே கொன்ட்டே தொிவித்துள்ளார்.