சிலியில் ஏற்பட்ட கலவரத்தில் 23 பேர் பலி

chili
chili

தென் அமெரிக்க நாடான சிலியில் கடந்த 5 வாரங்களாக தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருகிறது.

நாட்டில் குறிப்பிட்ட சில குடும்பத்தினர் மட்டும் வசதியான வாழ்க்கை வாழ்வதாகவும், அனைவருக்கும் சமூக, பொருளாதார நிலையில் சமநிலை இல்லை இத்தகைய நிலையை போக்க அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி கடந்த அக்டோபர் 18ம் திகதி முதல் அங்குள்ள முக்கிய நகரங்களில் கலவரம் இடம்பெற்று வருகிறது.

கலவரத்தில் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். 2 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் சிதறிய குண்டுகளின் துகள்கள் பட்டதில் 280 பேரின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது மக்களை அமைதி காக்குமாறு சிலி நாட்டின் அதிபர்
செபஸ்டியன் பினேரா கோரிக்கை விடுத்துள்ளார்.