5 கோடியே 56 இலட்சத்தை கடந்த கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை!

corona negative 1 2
corona negative 1 2

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 218 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் வளர்சிதை மாற்றமடைந்த கொரோனா மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியே 56 இலட்சத்தை கடந்துள்ளது.

குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்து 895 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 7 கோடியே 90 இலட்சத்து 23 ஆயிரத்து 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 16 இலட்சத்து 85 ஆயிரத்து 546 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 இலட்சத்து 6 ஆயிரத்து 546 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 17 இலட்சத்து 36 ஆயிரத்து 298 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 5 கோடியே 56 இலட்சத்து 1 ஆயிரத்து 161 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வெளியாகியுள்ளனர்.

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

அமெரிக்கா – 1,10,95,807
இந்தியா – 96,63,382
பிரேசில் – 64,05,356
ரஷியா – 23,43,967
துருக்கி – 19,01,307
கொலம்பியா – 14,04,168
அர்ஜெண்டினா – 13,84,277