நான்காவது அபுதாபி டி 10 லீக்கில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இலங்கை வீரர்கள்!

CB0D4A32 5320 42DF 9B2B 1AE9D8BD2D4A
CB0D4A32 5320 42DF 9B2B 1AE9D8BD2D4A

2021 ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நான்காவது அபுதாபி டி 10 லீக்கில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அபுதாபி டி 10 தொடரானது எதிர்வரும் ஜனவரி 21 – பெப்ரவரி 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இத் தொடரின் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் அமைந்துள்ள சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

இத் தொடரில் உலகெங்கிலும் உள்ள வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான கிறிஸ் கெயில், ரஸ்ஸல், அஃப்ரிடி உள்ளிட்ட பல வீரர்கள் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

இந் நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஏலத்தின் அடிப்படையில் இலங்கை வீரர்கள் பலரும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.