சிலியில் நீடிக்கும் அரசாங்க எதிர்ப்பு

2 sda
2 sda

தென் அமெரிக்க நாடான சிலியில் கடந்த 5 வாரங்களாக தொடர்ந்து கலவரம் நடந்து வருகிறது. நாட்டில் குறிப்பிட்ட சில குடும்பத்தினர் மட்டும் வசதியான வாழ்க்கை வாழ்வதாகவும் அனைவருக்கும் பொருளாதார நிலையில் சமநிலை இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இத்தகைய நிலையைப் போக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிலியில் சுரங்கப்பாதை கட்டணம் ஒரு மாதத்திற்கு முன்பு உயர்த்தப்பட்டது முதல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

அதன் தொடர்பில் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி முதல் அங்குள்ள முக்கிய நகரங்களில் கலவரம் நீடிக்கிறது. தலைநகரம் சாண்டியாகோ, அன்டோ பகாஸ்டா பாரிசோ, வினா டெல்மார் உள்ளிட்ட நகரங்களில் தீவைப்பு, கொள்ளை, கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. கலவரத்தை அடக்குவதில் ராணுவமும் போலிசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வன்முறை சம்பவங்களில் இதுவரை 23 பேர் பலியானதாகவும் 2,000 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

போலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிதறிய குண்டு துகள்கள் பட்டதில் 280 பேரின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.