சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் : ஈரான் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பலி!

iran
iran

சிரியாவிலுள்ள ஹாமா மாகாணத்தில் பதுங்கி இருந்த ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர் அண்மையில் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேல் நடத்திய இத் தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 6 பேர் உயிரிழந்ததாக சிரியாவில் செயற்பட்டு வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.