கனடாவிலும் கால்பதித்த புதிய கொரோனா வைரஸ்!

covid20 canada 261220 400
covid20 canada 261220 400
பிரித்தானியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா தொற்று, கனடாவில் இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,534,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 14,700 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கனடாவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, குடும்ப வட்டத்திற்கு வெளியே தனியார் வேறு நபருடன் சேர்ந்து கூட்டங்கள் கூட தடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது பிரித்தானியாவின் இங்கிலாந்தில் இருக்கும் டர்ஹாம்-ல் இருந்து திரும்பிய ஜோடிக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அந்தளவிற்கு ஆபத்து இல்லை எனவும், இவர்கள் ஒன்ராறியோவை சேர்ந்தவர்கள் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது
.
இதனால், ஒன்ராறியோவில், முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டியதன் அவசியத்தை மேலும் வலுப்படுத்துகிறது, மேலும் இன்று தொடங்கும் மாகாண அளவிலான பணிநிறுத்த நடவடிக்கைகள் உட்பட அனைத்து பொது சுகாதார ஆலோசனைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று தலைமை மருத்துவ அதிகாரி, பார்பரா யாஃப் கூறியுள்ளார்.


இந்த ஜோடி தற்போது தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஒன்ராறியோவில் சுமார் 14 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

இதனால் இதன் தெற்கில் 28 நாட்கள் வடக்கில் 14 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த புதன்கிழமை பிரித்தானியாவில் இருந்து கனடாவிற்கு வரும் பயணிகள் விமானங்களை நிறுத்தி வைப்பதாகவும், இது ஜனவரி 6-ஆம் திகதி வரை நீடிக்கும் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.