கொரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்ட தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

image 5 1
image 5 1

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில், பைஸர் பயோ என் டெக் கொரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பின், தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர் டிசம்பர் 18 ஆம் திகதி பைஸர் பயோ என் டெக் கொரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

6 நாள் கழித்து, கொரோனா சிகிச்சைப் பிரிவில் வேலை செய்த பிறகு, வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் அவரிடம் தென்பட்டன. இதையடுத்து மேற்க்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்குக் கொரோனா தொற்று உறுதியானது.

தடுப்பு மருந்து செயல்பட சுமார் 10 முதல் 14 நாள்களாகும் எனக் கூறப்படுகிறது.

மேலும், 2 முறை போட்டுக்கொண்டால் தான், தடுப்பு மருந்து 95 விழுக்காடு திறன்வாய்ந்ததாக இருக்கும் என்பதை வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.