போர்ச்சுகல் நாட்டில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பெண் சுகாதார ஊழியர் உயிரிழப்பு!

workerdied inportugal vaccine 05012021 400
workerdied inportugal vaccine 05012021 400

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் நல்ல பயன் தரும் என உறுதி செய்யப்பட்டுள்ள பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அமெரிக்கா, போர்ச்சுகல்உள்பட பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

இதற்கிடையில், போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கடந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முன்கள ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அந்நாட்டின் போர்ட்டோ நகரில் உள்ள மருத்துவமனையில் சுகாதாரத்துறை ஊழியராக பணியாற்றி வந்த சோனியா அக்விடோ என்ற 41 வயது நிரம்பிய பெண்ணுக்கு கடந்த 30-ம் தேதி பைசர் நிறுவன தடுப்பூசி போடப்பட்டது.

பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின்னர் சோனியாவுக்கு எந்த விதமாக உடல்நலக்குறைவும், பக்கவிளைவுகளும் ஏற்படாமல் இருந்தது.

இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் 2 நாட்கள் கழித்து (48 மணி நேரம்) சோனியா கடந்த 1-ம் தேதி திடீரென உயிரிழந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனது தந்தை வீட்டிற்கு வந்திருந்த சோனியா எந்தவித உடல்நலக்குறைவுக்கும் உள்ளாகாமல் திடீரென உயிரிழந்தார்.

இதையடுத்து, உயிரிழந்த சோனியாவின் உடலை கைப்பற்றிய போச்சீகல் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்த உள்ளனர். உடற்கூறு ஆய்வு இன்று நடைபெற உள்ளது. இந்த உடற்கூறு ஆய்வில் தான் சோனியா எப்படி உயிரிழந்தார் என்பதற்கான முழுமையான விவரம் வெளிவரும்.

பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் சோனியா உயிரிழந்தாரா? என்பது குறித்த உண்மையான விவரம் இன்று நடைபெற உள்ள உடற்கூறு ஆய்விலேயே தெரியவரும்.

பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 நாட்களில் பெண் சுகாதார ஊழியர் உயிரிழந்த சம்பவம் போர்ச்சுகலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது