மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்கிறார்.
மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை நடைபெறும் விழாவில் உத்தவ் தாக்கரே முதல்வராக ஆளுநர் கோஷ்யாரி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.
சிவசேனாவின் சார்பில் ஏற்கனவே மனகோர் ஜோஷி, நாராயண் ரானே ஆகியோர் முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர். சிவசேனாவின் 3வது முதல்வர் உத்தவ் தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.