உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பலி!

brad cobraid
brad cobraid

பாதுகாப்பு உபகரணங்களின்றி மலையேறுவதில் வல்லவரான அமெரிக்காவை சேர்ந்த பிராட் கோப்ரைட் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலியாகினார்.

பிராட் கோப்ரைட் மற்றும் அவரது நண்பரும், சக மலையேற்ற வீரருமான அய்டன் ஜேக்கப்சன் ஆகிய இருவரும் மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ‘எல் பொட்ரெரோ சிக்கோ’ மலையில் ஏறினர். அப்போது பிராட் கோப்ரைட் மலையின் உச்சியை அடைந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதே போல் அய்டன் ஜேக்கப்சனும் மலையில் இருந்து தவறி விழுந்தார். ஆனால் அவர் குறைவான உயரத்தில் இருந்து விழுந்ததால் காயங்களுடன் உயிர் தப்பினார். பிராட் கோப்ரைட் இறப்புக்கு உலகம் முழுவதிலும் உள்ள மலையேற்ற வீரர்கள் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.