அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் பின்பற்றினால் தங்கள் நாடு மீண்டும் ஒப்பந்தத்தில் இணையும்! -அமெரிக்கா

iran us 768x449 1
iran us 768x449 1

அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் பின்பற்றினால் மாத்திரமே அந்த ஒப்பந்தத்தில் தங்கள் நாடு மீண்டும் இணையும் என்று அமெரிக்கா  தெரிவித்துள்ளது.

ஈரான் கடந்த  2015ஆம் ஆண்டு, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய 6 நாடுகளுடனும், ஐரோப்பிய கூட்டமைப்புடனும் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தது.

இவ்  ஒப்பந்தத்தின் மூலம்  ஈரானின்  செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை 98 சதவீதம் குறைக்கவும், ஈரான் அணுசக்தி நிலையங்களை சர்வதேச அணுசக்தி நிறுவனம் பார்வையிடவும், பதிலுக்கு ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு, ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆகியோர் விதித்த பொருளாதார தடைகளில் இருந்து நிவாரணம் வழங்கவும் வகை செய்தது.

எனினும் இவ்  உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா 2018ஆம்  ஆண்டு விலகி, ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் ஈரானும் பதிலுக்கு ஒப்பந்தத்தின் விதி முறைகளை மீறியது.

இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்குக் காணப்பட்டது.இந்நிலையில் தற்போது ஜோ பைடன் நிர்வாகம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது.

அந்தவகையில் அமெரிக்காவின் புதிய வெளியுறவு  அமைச்சரான ஆண்டனி பிளிங்கன்( Antony Blinken) இது குறித்த  முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிவிப்பில் ” அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்து, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ஜோ பைடன் தயாராக இருப்பதாகவும், அணுசக்தி ஒப்பந்தத்தில் பல்வேறு நிபந்தனைகளிலிருந்து ஈரான் வெகு தொலைவிலுள்ளதாகக் கூறினார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் ஜனாதிபதியா இருந்த டொனால்ட் ட்ரம்ப், அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகியதுடன், ஈரான் மீது பொருளாதார தடையும் விதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.