ரஷ்ய எதிர்கட்சி தலைவர் நவால்னிக்கு சிறை தண்டனை

Alexei Navalny 3
Alexei Navalny 3

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவெல்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அரசின் செயற்பாடுகளை அலெக்ஸி கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவரை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஜேர்மனியிலிருந்து கடந்த மாதம் ரஷ்யா திரும்பிய அலெக்ஸி, மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறியதாகக் கூறி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில் அலெக்ஸிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையறிந்த அவரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அலெக்ஸியை விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது